மாலத்தீவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்., இந்தியா முயற்சி
மாலத்தீவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) தொடங்க இந்தியா முயற்சித்து வருகிறது.
மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மொஹமட் சயீத் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய சயீத், மாலத்தீவில் "ஜனாதிபதி முய்ஸு அனைத்து நாடுகளுக்கும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். அரசாங்கம் முடிந்தவரை பல நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகிறது, இதனால் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்க முடியும்." என்று அவர் கூறினார்.
இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SAFTA) ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
1981-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மாலத்தீவு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டன.
மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பதிவுகளின்படி, கடந்த ஆண்டு இந்தியா மாலத்தீவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது.
2021-ஆம் ஆண்டு முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ரூ.25 ஆயிரம் கோடியைத் தாண்டியது. அடுத்த ஆண்டு (2022) இரு நாடுகளுக்கும் இடையே ரூ.41 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது.
இந்தியா முக்கியமாக மாலத்தீவில் இருந்து பழைய உலோகத்தை இறக்குமதி செய்கிறது. மாலத்தீவு பல மருந்துகள், சிமெண்ட், ரேடார் கருவிகள் மற்றும் அரிசி, மசாலா, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது.
மாலத்தீவுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் பணியை இந்தியா தொடரும் என்று முன்னதாக ஏப்ரல் மாதம் இந்தியா அறிவித்திருந்தது.
மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், முய்ஸு அரசாங்கத்தின் முறையீட்டின் பேரில், இந்தியா 2024-25ஆம் ஆண்டுக்கு மாலத்தீவிற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Maldives Relationship, India Maldives Free Trade Agreement, India Maldives FTA, Maldives India