பற்றி எரியும் மணிப்பூர்: ராகுல்காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தம்
மணிப்பூருக்கு சென்ற ராகுல்காந்தியின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இச்சமூகவத்தினர் தங்களுக்கு அந்தஸ்து கோரியதால், இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு சமூகத்திற்கும் இடையே பயங்கரமான மோதல் வெடித்து கலவரமாக மாறியது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.
இந்த வன்முறையில், பா.ஜனதா அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள் கலவரக்காரர்கள் தீக்கிரையாக்கினர். கலவர கும்பலுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாகிச்சூடு நடந்து வருகிறது. அப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராகுல்காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தம்
இந்நிலையில், மணிப்பூர் அருகே வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல முன்றய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இன்று மணிப்பூரின் சுராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுலை பிஷ்ணுபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி சென்ற காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தற்போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Rahul Gandhi’s convoy has been stopped by double engine Modi govt in Manipur.
— Shantanu (@shaandelhite) June 29, 2023
Modi doesn’t want to work for people and he won’t let Rahul Gandhi Ji to listen to the people of Manipur.
Na kaam karunga, na kisi ko karne dunga.. pic.twitter.com/8NkUWliw94
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |