இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு
இந்தியா அதன் புதிய ஏவுகணையை சோதனை செய்யவுள்ள நிலையில், இந்திய பெருங்கடலில் 2,530 கி.மீ. வரை ஆபத்தான பகுதியாக அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 20, 21 திகதிகளில் இந்த ஏவுகணை சோதனை நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 12) வெளியிடப்பட்டது.
இந்த சோதனை, முன்பை விட அதிக தூரத்தை உள்ளடக்கியுள்ளதால், விமானம் மற்றும் கடல் போக்குவரத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் NOTAM (Notice to Airmen) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, இந்த சோதனை ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மற்றும் அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவுகணை ஏவப்படலாம் என கூறப்படுகிறது.
இது Agni-6 (ICBM) ஏவுகணை அல்லது ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Agni-V போன்ற ஏவுகணைகள் ஏற்கெனவே 5,000 கி.மீ-க்கும் மேற்பட்ட தூரம் வரை சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்த பாதுகாப்பு மேம்பாட்டு முயற்சி, சீனா மற்றும் பாகிஸ்தானின் ஏவுகணை திறன்கள் வளர்ந்துவரும் சூழலில், நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Missile test 2025, India Missile trial, Agni-6 Missile test, DRDO Missile launch, Indian Ocean NOTAM, Hypersonic Missile test India