குறுகிய உரை நடத்திய நிதியமைச்சர் : அந்த 10 விடயங்கள் என்ன?
இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 58 நிமிடங்களுக்கு 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது இதுவரை இல்லாத அவரது குறுகிய உரையாக கூறப்படுகிறது.
குறுகிய உரை நடத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் 2020 இல் 2.40 மணிநேர உரைக்காக இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட் உரைக்கான சாதனையைப் படைத்தார்.
1977 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஹிருபாய் முல்ஜிபாய் படேல் மிகக் குறுகிய பட்ஜெட் உரை சாதனையை படைத்திருந்தார். அதன்போது அவர் பேசிய உரையில் வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே இருந்துள்ளன.
வார்த்தை எண்ணிக்கையில் மிக நீளமான பட்ஜெட் உரையை நிகழ்த்திய சாதனையை மன்மோகன் சிங்கி பெற்றார். அவர் நடத்திய உரையில் 18,650 வார்த்தைகள் இருந்துள்ளன.
காங்கிரஸ் MP சசி தரூர் கூறுகையில், நிர்மலா சீதாராமனின் இந்த ஆண்டு பட்ஜெட் உரை மிகக் குறுகிய உரைகளில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
- 2019 2 மணி 17 நிமிடங்கள் (137 நிமிடங்கள்)
- 2020 2 மணி 40 நிமிடங்கள் (160 நிமிடங்கள்)
- 2021 1 மணி 50 நிமிடங்கள் (110 நிமிடங்கள்)
- 2022 1 மணி 33 நிமிடங்கள் (93 நிமிடங்கள்)
- 2023 1 மணி 27 நிமிடங்கள் (87 நிமிடங்கள்)
- 2024 58 நிமிடங்கள்
கூறிய விடயங்கள்
- பாஜகாவின் இந்த இரண்டாவது ஆட்சியில், வளமான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை இரட்டிப்பாக்கி உள்ளோம் என்று என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
- 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 'Viksit Bharat' ஆக்க மோடி அரசு செயல்பட்டு வருகிறது. எங்கள் கவனம் "sabka sath, sabka vikas" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
- பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளின் மேல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
- பிரதமர் ஜன்மன் யோஜனா பழங்குடியின மக்களுக்கு உதவுகிறது. எங்களது ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் அரசு உதவியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- மக்களவை தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- வட்டி விகிதங்கள் இல்லாத அல்லது குறைவான வட்டி விகிதங்களுடன் நீண்ட கால நிதியுதவியை வழங்க 50 ஆண்டு வட்டியில்லா கடனுடன் ரூபாய் 1 லட்சம் கோடி கார்பஸ் நிறுவப்படும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக தொழில்நுட்பத்தை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பம் தொடங்கப்படும்.
- நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினருக்கு சொந்த வீடு கட்ட அரசு உதவும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |