ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பிய நோயாளிகள்! எந்த நாட்டில் தெரியுமா?
இந்தியாவில் ஒமைக்ரான பாதிப்பில் இருந்த நோயாளிகள் இரண்டு பேர் குணமாகியிருக்கும் தகவல், ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், தற்போது 89 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸால் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி, அந்நாட்டு அரசுகளால் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் இருந்து இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திற்கு வந்த பயணி ஒருவருக்கு ஒமைக்ரான இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவரைத் தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் ஒமைக்ரான் நோயாள் பாதிக்கப்பட்டால் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.