அணுசக்தி உற்பத்தியை விரிவாக்க இந்தியா திட்டம்: தனியார் யுரேனிய சுரங்கத்திற்கு அனுமதி
அணுசக்தி உற்பத்தியை விரிவாக்கும் திட்டத்தில் இந்திய அரசு சில முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்களுக்கு யுரேனிய சுரங்கம் நடத்த, இறக்குமதி செய்ய மற்றும் செயலாக்க அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை யுரேனியம் தொடர்பான செயல்கள் அனைத்தும், அதன் தவறான பயன்பாடு மற்றும் கதிர்வீச்சு பாதிப்புகள் காரணமாக அரசு கட்டுப்பாட்டில் இருந்தன.
ஆனால் தற்போது அணுசக்தி தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு கட்டமைப்பை உருவாக்க அரசு முனைந்துள்ளது.
அணுசக்தி பங்களிப்பை நாட்டின் மொத்த மின்சார தேவையில் 5 சதவீதமாக உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
2047-க்குள் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, 8 GW அளவில் உள்ள உற்பத்தி திறனை 100 GW-ஆக உயர்த்த முயற்சிக்கிறது.
பயன்படுத்தப்பட்ட யுரேனியம் (Spent Fuel) மீள்செயலாக்கம் மற்றும் புளூட்டோனியம் கழிவுகள் மேலாண்மை ஆகியவை தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆனால், அணுசக்தி நிலையங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சிறையா பங்குகளை பெற அனுமதி வழங்கும் விதமாக விதிமுறைகள் தளர்த்தப்படலாம்.
இந்தியா அரசின் இந்த புதிய முயற்சிகள் அனைத்தும், நாட்டின் அணுசக்தி துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும், தொழில்நுடப்பா வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நீடித்த எரிசக்தி உற்பத்திக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் புதைந்து கிடக்கும் 5 ட்ரில்லியன் டொலர் கனிம வளங்கள் - வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Nuclear power expansion, Uranium mining in India, Modi Nuclear energy plan, nuclear enegry investment in India, Uranium mining private sector