பாகிஸ்தானில் புதைந்து கிடக்கும் 5 ட்ரில்லியன் டொலர் கனிம வளங்கள் - வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், அதிலிருந்து மீள்வதற்கான பாரிய முயற்சியை மேற்கொண்டுவருகிறது.
சுமார் 3 முதல் 5 ட்ரில்லியன் டொலர் மதிப்பிலான அரிய கனிமங்கள் மற்றும் வளங்களை (Rare Earth Elements and Minerals) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக திறக்கவுள்ளது
இதற்காக, அமெரிக்கா, சீனா, சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், பிரித்தானியா போன்ற நாடுகளுடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டுவருகிறது.
முதலீட்டாளர்களுக்கான ஒப்பந்தங்கள் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த வளங்களை மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசியலமைப்பில் திருத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவல்களின்படி, சீனாவிற்கு கில்கித்-பால்டிஸ்தான் பகுதியில் ஆராய்ச்சி உரிமைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், அமெரிக்காவிற்கு வடக்கு பலூசிஸ்தான் மற்றும் தெற்கு கைபர் பக்துன்வா பகுதிகளில் சுரங்க திட்டங்களை மேம்படுத்தும் உரிமைகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுடன் Reko Diq என்ற உலகின் மிக முக்கியமான தங்கம்-செம்பு வளம் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
அரசியல் மற்றும் சட்ட ரீதியான சவால்களுக்கு மத்தியில், இந்த திட்டம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மாற்றக்கூடிய பெரும் வாய்ப்பாக கருதப்படுகிறது. உலக நாடுகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தயாராக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan rare earth minerals, pakistan Mineral reserves, Pakistan Mineral bidding, Pakistan Gold Copper Mines, Pakistan 5 trillion dollar Minerals