முதல்முறையாக DF-100 ஏவுகணையை வெளிப்படுத்திய சீனா - அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தல்
சீனா தனது சக்திவாய்ந்த DF-100 சூப்பர்சோனிக் ஏவுகணையின் காணொளியை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.
DF-100 ஏவுகணை எதிரியின் போர்கப்பல்களை தாக்கும் திறன்கொண்ட குருஸ் ஏவுகணையாகும்.
இது அமெரிக்காவின் போர் கப்பல்களுக்கும் இராணுவ தளங்களுக்கும் மிகப்பாரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம் என கூறப்படுகிறது.
2029-ல் இந்த ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் வாகனம் மட்டுமே காண்பிக்கப்பட்டது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2 நிமிட காணொளியில் DF-100 ஏவுகணையின் முழுமையான வடிவம் மற்றும் செயல்பாடுகள் தெளிவாக காண்பிக்கப்படுகிறது.
இந்த காணொளி, சீனாவின் People's Liberation Army (PLA) தயாரித்துள்ள ஆவணப்படத்தின் இறுதி அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது.
2019-ல் சீனாவின் PLA Rocket Force இதன் காணொளியை வெளியிட்டு பின்னர் நீக்கியது.
தற்போது சீனாவின் அரசு ஊடகங்கள் மற்றும் அரசு செய்தி நிறுவனமான Xinhua-வின் சமூக ஊடக கணக்குகளில் DF-100 ஏவுகணையின் அதிகாரப்பூர்வ காணொளி வெளியிடப்பட்டுள்ளன.
இந்த காணொளி வெளியீடு அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |