இந்திய வீரர்களை அவமானப்படுத்தி பேசிய பாகிஸ்தான் வீரர்
எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பயத்தைத் தரக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர் கூட இல்லையென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் அவமானப்படுத்தி பேசியுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு ஒரு நாள், டெஸ்ட் தொடரில் விளையாடிவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத். இதன் பிறகு கடந்த 2019ம் ஆண்டு டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக விளையாடினார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்களை அவமானப்படுத்தி பேசிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பயத்தைக் காட்ட இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட கிடையாது.
பும்ரா, ஜடேஜா, அஸ்வின் இவர் மட்டும்தான் நல்லமுறையில் பந்து வீசுகிறார்கள். பந்து வீசும் போது, எதிரணி பேட்ஸ்மேன் பயப்படனும்.
அந்த பயத்தை, ஆபத்தை தரக்கூடிய எந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய கிரிக்கெட்டில் இல்லை.
நான் இப்படி பேசுவது இந்திய வீரர்களை அவமரியாதை செய்வதற்காக இல்லை. நான் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரைப் பார்த்து பயந்துள்ளேன்.
அவர் யார் என்றால் சோயிப் அக்தர் தான். அவரைப் பார்த்தாலே எதிரணி பேட்ஸ்மேன்கள் பயந்து விடுவார்கள்.
எனக்கு விராட் கோலியுடன் நல்ல நட்பு இருக்கிறது. எனக்கு கிரிக்கெட்டில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவரிடம் தான் கேட்பன். எனக்கு எல்லா சந்தேகங்களுக்கும் அவர் விடை கொடுப்பார் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |