அதிகரிக்கும் போர் பதற்றம் - மே 7 ஆம் திகதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இரு நாடுகளின் கடற்படை கப்பல்களும் அவ்வப்போது ரோந்து சென்று வருகிறது.
நாடு தழுவிய போர் ஒத்திகை
பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில், போர் ஒத்திகை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வரும் மே 7 ஆம் திகதி, அனைத்து மாநிலங்களும் போர் ஒத்திகை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல், தாக்குதலின் போது தற்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்
போர் காலத்தில் மக்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது, முக்கிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை எதிரி கண்ணில் இருந்து மறைக்க ஏற்பாடு செய்வது, இரவு நேரத்தில் எதிரி நாட்டு விமானங்கள் தாக்குதலில் ஈடுபடும் போது மின்விளக்குகளை அணைப்பது
உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைப்பது, தாக்குதல் நடந்தால் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புத்துறை எப்படி செயல்பட வேண்டும் போன்ற ஒத்திகைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |