இனி ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு செல்ல முடியாது - விமான நிலையம் போல் புதிய கட்டுப்பாடு
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர்.
பயணிகளின் பயணத்தை மேம்படுத்தும் வகையில், ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
லக்கேஜ் கட்டுப்பாடு
தற்போது லக்கேஜ் கொண்டு செல்வதில் முக்கிய கட்டுப்பாடு ஒன்றை அமல்படுத்த உள்ளது.
பொதுவாக விமான பயணத்தின் போது, பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ் எடை அங்குள்ள இயந்திரத்தில் சரிபார்க்கப்படும். எடை அதிகமாக இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேபோல் ரயில் பயணத்தின் போதும், பயணிகளின் லக்கேஜ் எடையை பரிசோதித்து நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடை இருந்தால் அதிக கட்டணம் விதிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் சந்திப்பு, மிர்சாபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கொண்டு வரப்பட உள்ளது. இங்கு எடை சரிபார்க்கும் எந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது.
எவ்வளவு லக்கேஜ் அனுமதி?
ரயில் பயணத்தில் லக்கேஜ் கொண்டு செல்ல ஏற்கனவே கட்டுப்பாடுகள் உள்ளது. இதன்படி, முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையும், ஏசி 2 ஆம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையும், ஏசி 3 ஆம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையும் லக்கேஜ் எடுத்து செல்லலாம்.
அதே போல், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையும், 2ஆம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையும் லக்கேஜ் கொண்டு செல்லலாம்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.960 கோடி முதலீட்டில் பிரக்யராஜ் சந்திப்பு ரயில் நிலையம் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
மேலும், 2026 டிசம்பர் முதல் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டெர்மினல் பாஸ் வழங்கப்பட உள்ளது. பயணிகள் மட்டுமே டெர்மினல் பகுதிக்கு செல்ல முடியும். பயணிகள் உடன் வருபவர்கள் பிளாட்பார்ம் டிக்கெட் பெற்று குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே செல்லும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |