ட்ரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம்... அமெரிக்க எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து, இந்தியா அமெரிக்காவிலிருந்து எண்ணெய் கொள்முதலை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட இரு மடங்காக
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, 2025 ஆம் ஆண்டிம் முதல் 6 மாதங்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய கோரிக்கையான அமெரிக்கா உடனான வர்த்தக உறவுகளை மறுசீரமைக்க இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த எரிசக்தி கொள்முதல் அதிகரிப்பு பிரதிபலிக்கிறது என்றே கூறுகின்றனர்.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி 2023-24 நிதியாண்டில் 1.41 பில்லியன் டொலரில் இருந்து 2024-25 நிதியாண்டில் 2.46 பில்லியன் டொலராக கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கு கெட்ட செய்தி... ரூ 27,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது, அங்கு இரு தலைவர்களும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு உறுதியளித்தனர்.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்க எரிசக்தி இறக்குமதியை 15 பில்லியன் டொலர்களிலிருந்து 25 பில்லியன் டொலர்களாக உயர்த்த இந்தியா உறுதியளித்தது, அதே நேரத்தில் இருதரப்பு வர்த்தகம் 2030 ஆம் ஆண்டுக்குள் 200 பில்லியன் டொலர்களிலிருந்து 500 பில்லியன் டொலர்களாக இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவிலிருந்து இந்திய கச்சா எண்ணெய் கொள்முதல் 114 சதவீதம் உயர்ந்து 3.7 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.73 பில்லியன் டொலராக இருந்தது.
சர்ச்சைக்குரிய விடயமாக
ஜூலை 2025 இல் இந்தியா ஜூன் 2025 உடன் ஒப்பிடும்போது அமெரிக்காவிலிருந்து 23 சதவீதம் அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில், அமெரிக்காவின் பங்கு முன்னர் 3 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அந்தப் பங்கு 8 சதவீதமாக அதிகரித்தது.
சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்தும் என்று மதிப்பிட்டுள்ளது, மேலும் LNG தேவை ஆண்டுதோறும் 78 சதவீதம் அதிகரித்து 64 பில்லியன் கன மீற்றரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்கா - இந்தியா இடையேயான எரிசக்தி உறவுகள், குறிப்பாக ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவது தொடர்பாக, ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே உள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க, ரஷ்யாவுடனான எரிசக்தி உறவை மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது அழுத்தம் அளித்துள்ளதுடன், 25 சதவீத வரியும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |