கொரோனா பாதிப்பில் உலகிலேயே புதிய உச்சத்தை தொட்ட இந்தியா!
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில், நேற்று ஒரே நாளில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,46,786 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகிலேயே பதிவாகியுள்ள மிக அதிகபட்ச ஒரு நாள் தொற்று எண்ணிக்கை ஆகும்.
இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,66,10,481-ஆக அதிகரித்துள்ளது. அதில் 25,52,940 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,624 பேர் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,89,544-ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR ) படி, ஏப்ரல் 23 வரை கோவிட்-19க்கு 27,61,99,222 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் இதுவரை மொத்தம் 14,62,66,719 பேர் (14.6 கோடி மக்கள்) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31,00,024 பேர் (31 லட்சம் மக்கள்) இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.