இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே தொழில்துறை கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
டெல்லியில் இரு நாடுகளுக்கு இடையிலான 11-வது தொழில்துறை ஒத்துழைப்பு கூட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் நடைபெற்றது.
இதன்மூலம், அலுமினியம், உரங்கள், ரயில்வே மற்றும் சுரங்க தொழில்நுட்பங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுமுயற்சியை ஆழப்படுத்தியுள்ளன.
இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், சுரங்க உபகரணங்கள், தேடல் தொழில்நுட்பங்கள், தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றில் திறன் மேம்பாடு மற்றும் தொழிலநுட்ப பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளன.
இக்கூட்டத்திற்கு, இந்தியாவின் DPIIT செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா மற்றும் ரஷ்யாவின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் துணை அமைச்சர் அலெக்ஸி குரூஸ்டேவ் தலைமை தாங்கினர்.
அரசு அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில்துறை நிபுணர்கள் என 80-கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் முக்கியமாக வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதில் சிறிய விமானங்களுக்கான பிஸ்டன் என்ஜின்கள், கார்பன் ஃபைபர் தொழில்நுட்பம், 3D printing மற்றும் additive manufacturing அடங்கும்.
மேலும், அரிதான பூமி கனிமங்கள் (Rare Earth Minerals), underground coal gasification மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் கவன செலுத்தப்படும்.
இக்கூட்டத்தின் முடிவில், இரு நாடுகளும் தங்கள் மூலதன மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Russia industrial cooperation, India Russia railway partnership, India Russia industrial ties, India Russia aerospace collaboration, India Russia Trade Agreement 2025