அமெரிக்காவை எதிர்த்து வலுப்பெறும் இந்தியா-ரஷ்யா கூட்டணி
அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்த்து இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான கூட்டணி வலுவடைந்துவருகிறது.
அமெரிக்கா இந்தியா மீது கடுமையான வரிவிதிப்புகளை விதித்துள்ள நிலையில், ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி பட்ருஷெவ் (Dmitry Patrushev) இந்தியாவிற்கு வரவிருக்கிறார்.
இந்த வருகை, இரு நாடுகளிடையிலான விவசாய மற்றும் உர வணிக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
அமெரிக்கா தற்போது இந்தியா ஏற்றுமதி செய்யும் இறால் (Shrimp) பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
இதனால், அமெரிக்க சந்தையில் இந்தியா மற்ற நாடுகளுடன் (ஈக்வடோர், இந்தோனேசியா, வியட்நாம், சீனா) கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
இந்த சூழலில், ரஷ்யா இந்தியாவிற்கான புதிய மற்றும் நம்பகமான சந்தையாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
பட்ருஷெவ் விவசாய நிபுணராக இருப்பதால் இந்திய விவசாய மற்றும் வர்த்தக அமைச்சு அதிகாரிகளை சந்தித்து, இறால் இறக்குமதி மற்றும் உர விநியோக ஒப்பந்தங்களைப் பற்றி பேசவுள்ளார்.
இந்த முக்கிய சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான விவசாய வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Russia shrimp trade 2025, Dmitry Patrushev India visit, US tariffs on Indian shrimp exports, India fertilizer deal with Russia, India Russia agriculture cooperation, India diversifies shrimp export markets, US–India trade war 2025, Russia new market for Indian seafood, India rejects US crude oil allegations