வலுப்பெறும் இந்தியா-ரஷ்யா வர்த்தகம்., இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைக்க ரஷ்யா திட்டம்
இந்தியா-ரஷ்யா இடையிலான நீண்டகால வணிக மற்றும் இராஜதாந்திர உறவுகள் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளன.
ரஷ்யா, இந்தியாவில் ரயில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி மையங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ரயில்வே நிறுவனம் TMH, இந்திய ரயில்வேயுடன் ஏற்கனவே ரூ.55,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இதில் 1,920 வந்தே பாரத் sleeper coach பெட்டிகளை உற்பத்தி மற்றும் 35 ஆண்டுகள் பராமரிப்பு பணிகள் அடங்கும்.
TMH தலைமைச் செயல் அதிகாரி கிறில் லிபா (Kirill Lipa), ரஷ்யாவின் உள்நாட்டுச் சந்தை தேவைகளுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உபகரணங்கள் (Components) பயன்படக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.
“இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இந்தியாவில் சில உற்பத்தி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம், இதன்மூலம் சில உபகரணங்ககளை ரஷ்யாவிற்கும் ஏற்றுமதி செய்ய முடியும்,” என லிபா கூறினார்.
இந்திய மற்றும் ரஷ்யாவில் உள்ள பங்குதாரர்கள் இடையே நல்ல தொடர்புகள் இருப்பதால், இந்த ஒத்துழைப்பு இலகுவாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டம் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள ரஷ்யா மீதான தடைகள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று லிபா உறுதியளித்தார்.
இந்த இந்திய-ரஷ்ய கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தசாப்தங்களைக் கடந்த வணிக உறவுகள், இப்போது உற்பத்தி மற்றும் தொழில்துறையில் வலிமையாக மாறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia to set up Railway manufacturing facilities in India, Russia India Relationship, India Russia Friendship, russia India trade