இந்தியா அந்த முடிவுக்கு வர வேண்டும்... ரஷ்ய எண்ணெய் குறித்து அமெரிக்கா நெருக்கடி
ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு உதவுவது போன்றது, அதை நிறுத்த வேண்டும் என வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீற்றர் நவரோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்குத் தேவையான
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர முயற்சிகள் முன்னெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியா மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய்க்கான உலகளாவிய தீர்வு மையமாக இந்தியா செயல்படுகிறது, தடைசெய்யப்பட்ட கச்சா எண்ணெயை அதிக மதிப்புள்ள ஏற்றுமதியாக மாற்றுகிறது, அதே நேரத்தில் ரஷ்யாவிற்குத் தேவையான நிதியையும் வழங்குகிறது என பீற்றர் நவரோ விமர்சித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பது சந்தர்ப்பவாதமானது மற்றும் புடினின் போர் பொருளாதாரத்தை தனிமைப்படுத்தும் சர்வதேச சமூகத்தின் கடும் முயற்சிகளை கேலிக்கு உள்ளாக்குகிறது என்றார்.
சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது, மேலும் இந்தியாவின் எரிபொருள் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளால் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கு இந்தியா வருவாய் அளித்து வருகிறது. ரஷ்ய எண்ணெய் தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார்.
ரஷ்யாவுடன் நல்லுறவு
ஆனால், இந்திய சுதந்திர தின விழா மேடையில், ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிகளுக்கு மத்தியில் தனது நாட்டின் விவசாயிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்து, பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலுவான பதிலை அளித்திருந்தார்.
பல தசாப்தங்களாக இந்தியா ரஷ்யாவையே நம்பத்தகுந்த கூட்டாளியாக தக்கவைத்து வருகிறது. மட்டுமின்றி, உக்ரைன் போருக்கு மத்தியில் மாஸ்கோவில் ஜனாதிபதி புடினை மோடி சந்தித்ததன் மூலம், இந்தியா ரஷ்யாவுடன் நல்லுறவைத் தொடர்ந்து பராமரித்தும் வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2021ல் ரஷ்யா உடனான வர்த்தகம் 297 பில்லியன் டொலர்கள் என இருந்த நிலையில், தற்போது 2024ல் வெறும் 77 பில்லியன் டொலர் என சரிவடைந்துள்ளது என்றே தெரிய வருகிறது.
இருப்பினும் உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் 105 பில்லியன் டொலர் மதிப்பிலான எரிபொருள் இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்கா - ரஷ்யா இடையேயான வர்த்தகம் 2021ல் 36 பில்லியன் டொலர் என இருந்தது, 2024ல் 5.2 பில்லியன் டொலர் என சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |