இந்தியாவின் தேர்வுமுறை மோசடியானது.., பணம் இருந்தால் வாங்கிவிடலாம்: ராகுல்காந்தி பேச்சு
இந்தியாவின் தேர்வுமுறை மோசடியானது என்றும் பணம் இருந்தால் வாங்கிவிடலாம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல்காந்தி பேசியது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.
அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில் நடக்கும் முக்கிய தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் இந்த பிரச்சனைக்கு தன்னை தவிர மற்றவரை குற்றம் சாட்டி வருகிறார். அவருக்கு இந்த விவகாரத்தில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பதில் அடிப்படையான புரிதலே இல்லை.
இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களும் இந்த விவகாரத்தில் கவலையுடன் உள்ளனர். இந்தியாவின் தேர்வுமுறை மோசடியானது என்று அவர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர்.
பணம் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் கருதுகின்றனர். அதையே தான் நாங்களும் கருதுகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |