இனி பிரான்சிலும் இந்தியாவின் UPI பயன்படுத்தலாம்! பிரதமர் மோடி
இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரான்சிலும் இனி UPI
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார். பின்பு, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம் எனக் கூறினார். இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்ற சேவை UPI-யை பிரான்சிலும் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார். மேலும் அவர், இந்த சேவை பிரான்ஸ் ஈபிள் டவரில் இருந்து தொடங்கப்படும் எனவும் கூறினார்.
அதுபோல, சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்தை எடுத்து செல்ல வேண்டாம். UPI பயன்படுத்தி பணத்தை பரிமாறிக் கொள்ளலாம்.
இந்தியாவின் UPI
கடந்த 2016 ஆம் ஆண்டு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. இந்தியாவில் உள்ள பல வங்கி கணக்குகளை மொபைல் ஆப் மூலம் UPI பயன்படுத்த முடியும்.
பொதுமக்கள் எங்கு சென்றாலும் துணிக்கடை முதல் டீக்கடை வரை UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
Payu
2022 ஆம் ஆண்டு என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் தொடர்பாக 'லைரா' என்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
அதுமட்டுமல்லாமல், இந்த வருடம் சிங்கப்பூர் PayNow உடன் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |