இந்தியா 2 போட்டிகளில் வென்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் - முழு விவரம்
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோற்றதன் மூலம், இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா படுதோல்வி
2026 T20 உலககிண்ணத்தின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம், இந்தியா ஐசிசி போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்று வந்த வெற்றிகள் 17 வெற்றிகளுடன் முடிவுக்கு வந்தது.

T20 உலககிண்ண வரலாற்றில் இந்திய அணி 50க்கும் குறைவான ஓட்ட வித்தியாசங்களிலே தோல்வியை தழுவியிருந்தது. இதன் மூலம், ரன்ரேட் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.
இதனால், இந்த தோல்வி இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பையும் சிக்கலாக்கியுள்ளது.
சூப்பர் 8 சுற்று பி பிரிவில் இந்தியா உடன், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவு ஆகிய அணிகள் உள்ளது. இந்தியா வரும் பிப்ரவரி 26 ஆம் திகதி ஜிம்பாப்வேவையும், மார்ச் 1 ஆம் திகதி மேற்கிந்திய தீவையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா, இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதன் அரையிறுதி வாய்ப்பு உறுதியாக இல்லை.
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு
இந்தியாவின் ரன் ரேட்(NRR) -3.80 என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனால் 2 போட்டிகளிலும் பாரிய வெற்றி பெற்று NRR விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அந்த அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், 4 புள்ளிகளுடன் அரையிறுதி செல்ல முடியும்.
தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் தோற்றாலும், 3 அணிகளும் 4 புள்ளிகளுடன் இருக்கும். இந்த சூழலில் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ள அணியே அரையிறுதிக்கு செல்லும்.
இதனால், இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றியை பொறுத்தே, அதன் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |