இலங்கை- இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை மார்ச்சில் தொடக்கம்
இலங்கை- இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை மார்ச்சில் தொடங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தின் துறைமுக நகரமான காங்கேசன்துறைக்கும் இந்தியாவில் தமிழகத்திற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கிய பணிப்புரையை அடுத்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுடன் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் சில காலமாக நடத்தப்பட்டு, சாதகமான பதிலைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து படகு சேவை தொடங்கப்பட உள்ளது.
படகு சேவைகள் ராமாயண இதிகாசத்தின் வழியை பின்பற்றி இராமர் பால பாதையை பணப்படுத்த வேண்டுமா அல்லது சங்கமித்திரை இலங்கைக்கு வருகை தந்த போது உபயோகப்படுத்தப்பட்ட பாதையை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.
காங்கேசன்துறை அல்லது மன்னாரில் குடிவரவு சோதனை நிலையம், சுங்க அனுமதி நிலையம் மற்றும் துறைமுக அதிகாரசபை நிலையம் என்பன படகு சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அரச திணைக்களங்களுக்கும் இடையில் மேலும் கலந்துரையாடப்படவுள்ளது.