2028-க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியா- மோர்கன் ஸ்டான்லி அறிக்கை
இந்தியா 2028-ஆம் ஆண்டிற்குள் ஜேர்மனியை முந்தி உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவாகும் என மோர்கன் ஸ்டான்லே (Morgan Stanley) நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது சாதாரண வளர்ச்சி அல்ல, தீவிரமான பொருளாதார மாற்றங்கள் மற்றும் வெகு முன்னோக்கான தீர்மானங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளது என பாஜக (BJP) தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய வளர்ச்சி திட்டங்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், Make in India, Digital India போன்ற திட்டங்கள் இந்தியாவை தொழில் வளர்ச்சியின் மையமாக மாற்றியுள்ளன.
கிராமங்கள் தொழில் மையங்களாக வளர, நகரங்கள் முக்கிய பொருளாதார மையங்களாக உருவாகி வருகின்றன.
- மிகப்பெரிய கட்டமைப்பு (Infrastructure) வளர்ச்சி திட்டங்கள்
- டிஜிட்டல் மாற்றம் மூலம் கோடிக்கணக்கான மக்களை இணைத்தல்
- உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய பொருளாதார திருத்தங்கள்
இந்தியாவின் வளர்ச்சி வெறும் எண்ணிக்கைகளின் பின்னணியில் மட்டும் இல்லாமல், 1.4 பில்லியன் மக்களின் கனவுகளையும் பிரதிபலிக்கிறது.
வளர்ச்சியை ஆதரிக்கும் காரணிகள்
மோர்கன் ஸ்டான்லே கூறுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல்வேறு காரணிகளால் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது:
- வளர்ந்து வரும் மக்கள் தொகை
- வலுவான ஜனநாயக அமைப்பு
- நிதி மற்றும் பொருளாதார நிலைத்தன்மை
- மேம்பட்ட கட்டமைப்பு திட்டங்கள்
- தொழில்முனைவோர் வளர்ச்சி
- சமூக முன்னேற்றம்
இந்த நிலை தொடருமானால், இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் புதிய உயரங்களை தொடும் என்றும் அடுத்த கட்ட பொருளாதார சூப்பர்பவர் இந்தியா தான் என்பதும் உறுதியாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |