இந்தியாவில் அறிமுகமாகும் e-Aadhaar செயலி-வீட்டிலிருந்தே தகவல் திருத்தம் செய்யலாம்
இந்திய அரசு, ஆதார் அட்டை தகவல்களை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் புதிய e-Aadhaar மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.
UIDAI உருவாக்கும் இந்த செயலி, 2025 இறுதிக்குள் Android மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை மாற்ற, மக்கள் Aadhaar Seva Kendra-விற்கு சென்று ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்கவேண்டும்.
ஆனால், புதிய e-Aadhaar செயலி மூலம், இத்தகவல்களை முழுமையாக டிஜிட்டல் முறையில் வீட்டிலிருந்தே திருத்த முடியும்.

இந்த செயலி, அரசு தரவுத்தளங்களுடன் இணைந்து, பார்ஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை தானாகச் சரிபார்க்கும், இதனால், தகவல் பிழைகள் மற்றும் மோசடிகள் குறையும்.
பாதுகாப்பை மேம்படுத்த, UIDAI இந்த செயலியில் AI மற்றும் முக அடையாளம் (Facial Recognition) தொழில்நுட்பங்களை இணைக்கிறது.
இதன்மூலம், உண்மையான பயனாளர்கள் மட்டுமே தங்கள் ஆதார் விவரங்களை மாற்ற முடியும்.
ஆனால், உடல் அடையாளங்கள் (கைரேகை, கருவிழி ஸ்கேன்) மாற்றம் செய்ய மக்கள் இன்னும் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
இந்த செயலியின் மூலம், நேரம் மற்றும் செலவு குறையும், அவனப்பணி, நீண்ட வரிசைகள் நீங்கும், மோசடி தடுப்பு அதிகரிக்கும் மற்றும் சில மணி நேரங்களில், தகவல் புதுப்பிப்பு முடியும்.
DigiLocker மற்றும் UMANG போன்ற தளங்களைப் போலவே, e -Aadhaar செயலி இந்தியாவின் டிஜிட்டல் அடையாள சூழலின் முக்கிய அங்கமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
e-Aadhaar app India launch 2025, UIDAI Aadhaar update mobile app, Aadhaar card instant update features, e-Aadhaar AI facial recognition, Aadhaar address phone DOB change app, UIDAI digital identity ecosystem India, Aadhaar online update security features, DigiLocker UMANG Aadhaar integration, Aadhaar fraud prevention AI verification, Aadhaar demographic update mobile app