உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா முடிவு! கசிந்த முக்கிய தகவல்
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய படையினர் தொடர்ந்து போர் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு நாடுகளின் சண்டை உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமூக முடிவு எட்டப்படும் பட்சத்தில் யுத்தமானது நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Breaking: India to send humanitarian assistance to Ukraine
— Sidhant Sibal (@sidhant) February 28, 2022
இந்த சூழலில் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்நாட்டுக்கு உதவிகள் அனுப்படும், எது போன்ற உதவிகள் வழங்கப்படும் என்ற விபரங்கள் உடனடியாக இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்தில் ஐ.நாவில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.