பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் ’சுதர்ஷன் சக்ரா’ S-400 ஏவுகணை அமைப்பு
இந்திய நகரங்கள் மீது நேற்று இரவும் இன்று அதிகாலையும் பாகிஸ்தான் ஏவிய 15 ஏவுகணைகளை செயலிழக்கச் செய்ய ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 பாதுகாப்பு அமைப்பை இந்தியா பயன்படுத்தியுள்ளது.
இந்தியாவை நோக்கி
மட்டுமின்றி, இஸ்ரேலிய HARPY ட்ரோன்களை ஏவி விட்டு லாகூரில் அமைந்துள்ள ஒன்று உட்பட, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்களை செயலிழக்கச் செய்துள்ளனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்தியாவை நோக்கி குறிவைக்கப்பட்ட நகரும் இலக்குகள் மீது விமானப்படை நேற்று இரவு S-400 அமைப்பை செயல்படுத்தியதாகவும் அந்த இலக்குகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
பின்னர் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடார்களை செயலிழக்க செய்ய இந்தியா தனது ஹார்பி ட்ரோன்களை பயன்படுத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் வடிவமைத்துள்ள ஹார்பி ட்ரோன்கள் எதிரிகளின் ரேடார் அமைப்புகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முடக்குவதில் செயல்பட உகந்ததாக உள்ளது.
இது அதிக தாக்கும் திறன் கொண்ட போர்முகத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை தன்னியக்கமாகத் தேடித் தாக்கக்கூடிய சிறப்பு ரேடாரைக் கொண்டுள்ளது.
சுதர்ஷன் சக்ரா
குறிப்பாக, இந்த ட்ரோன்களால் ஒரு வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் இலக்குகளைக் கண்காணித்து அழிக்க முடியும்; இது அதிர்வெண்களைக் கண்டறிந்து பின்னர் எந்த திசையிலிருந்தும் தாக்குவதன் மூலம் இதைச் செய்கிறது.
ஹார்பி ட்ரோன்களை உக்கிரமான தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம், இரவு அல்லது பகல் வேளைகளில் 9 மணிநேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது.
இந்தியாவால் சுதர்ஷன் சக்ரா என்று அழைக்கப்படும் S-400 பாதுகாப்பு அமைப்புகள், உலகிலேயே மிகவும் மேம்பட்டவையாகும்.
ரஷ்யா வடிவமைத்துள்ள S-400 அமைப்பால் 600 கி.மீ தொலைவில் இருந்து உள்வரும் ஏவுகணைகளைக் கண்காணிக்க முடியும். மட்டுமின்றி 400 கி.மீ தூரத்திற்குள் இந்த இலக்குகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது இதன் சிறப்பு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |