இலங்கையில் நேருக்கு நேர் சந்தித்த இந்திய, சீன போர்க்கப்பல்கள்
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து நான்கு போர்க்கப்பல்கள் இலங்கை தலைநகர் கொழும்புக்கு வந்தன.
இதில் இந்தியாவின் ஒரு போர்க்கப்பலும், சீனாவின் 3 போர்க்கப்பல்கள் அடங்கும்.
இலங்கை வலைத் தளமான டெய்லி மிரர் தகவல்படி, இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் சீன போர்க்கப்பல்கள் 3 நாள் விஜயத்தில் கொழும்பை வந்தடைந்துள்ளன.
இந்திய கடற்படையின் INS மும்பை போர்க்கப்பல் முதன்முறையாக இலங்கை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு இலங்கை கடற்படை வரவேற்பு அளித்துள்ளது. இந்த வருடத்தில் இந்திய கப்பலொன்று இலங்கைக்கு வருகை தருவது இது எட்டாவது தடவையாகும்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்களான HE FEI, WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய கப்பல்களும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
பல நிகழ்வுகளில் பங்கேற்கும் ஐ.என்.எஸ் மும்பை
ஐ.என்.எஸ் மும்பை 410 பணியாளர்களுடன் 163 மீற்றர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும். டோர்னியர் உளவு கப்பலுக்கு தேவையான பாகங்களுடன் இந்த கப்பல் வந்துள்ளது.
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த 2022 ஆகஸ்டில் டோர்னியர் உளவு கப்பலை இந்தியா பரிசளித்தது.
ஐ.என்.எஸ் மும்பை சில நிகழ்வுகளில் இலங்கை கடற்படையுடன் பங்கேற்கும். இந்த போர்க்கப்பலின் ஊழியர்கள் இலங்கையில் உள்ள சில சுற்றுலா மையங்களையும் பார்வையிடுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 29-ஆம் திகதி ஐ.என்.எஸ் கப்பல் இலங்கைக் கப்பலுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது.
ஐ.என்.எஸ் மும்பை என்பது இந்தியாவின் உள்நாட்டு போர்க்கப்பல் ஆகும், இது 2001-இல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
சீன போர்க்கப்பல்கள்
இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக 1473 மாலுமிகளுடன் மூன்று சீன போர்க்கப்பல்கள் இலங்கை வந்துள்ளன.
இவற்றில் மிகப் பாரியது 'ஹீ ஃபெய்'. இதன் நீளம் 144.50 மீற்றர், இதில் 267 குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
210 மீற்றர் நீளம் கொண்ட வுஜிஷான் போர்க்கப்பல் 872 மாலுமிகளுடன் இயங்கக்கூடியது.
அதே நேரத்தில், கில்லன்ஷன் 210 மீற்றர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், அதில் 334 குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India China Sri Lanka, Warship vs warship, India China warships at Sri Lankan port, INS Mumbai