மன்னிப்புக் கேட்டு இந்தியா சரணடையும்... அமெரிக்க அதிகாரியின் ஆணவப் பேச்சு
இன்னும் சில மாதங்களில் இந்தியா அமெரிக்கா பக்கம் திரும்பும் என்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபடும் என்றும் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
மன்னிப்புக் கேட்டு சரணடையும்
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்க நிர்வாகம் அளித்துவரும் அழுத்தங்களைப் புறக்கணித்து இந்தியா வலுவான நிலை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில்,
இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் இந்தியா மன்னிப்புக் கேட்டு சரணடையும் என தாம் நம்புவதாக அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்புடன் இந்தியா மிக விரைவில் ஒப்பந்தம் முன்னெடுக்கும் என்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை அவர்கள் ஆதரிக்கவில்லை என்றால், 50 சதவீத வரி செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
தொலைத்து விட்டோம்
ஆனால், இந்தியாவையும் ரஷ்யாவையும் இருண்ட தேசமான சீனாவிடம் நாம் தொலைத்து விட்டோம் என சமூக ஊடகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் புலம்பிய நிலையிலேயே லுட்னிக் இந்தியா சரணடையும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரம்பின் அந்த கருத்தானது, இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இடையேயான ஆழமான உறவுகளை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்பதையே குறிப்பிடுவதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |