வரலாற்றறில் முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி
2025 ICC மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது.
நவி மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டி, மழையால் 2 மணி நேரம் தாமதமானாலும், முழு ஓவர்கள் நடைபெற அனுமதிக்கப்பட்டது.

இந்தியா முதலில் துடுப்பாடி 298-7 என்ற சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்தது.
ஷபாலி வர்மா 78 பந்துகளில் 87 ஓட்டங்கள் எடுத்தார். அவருடன் தீப்தி ஷர்மா 58 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியாவின் இந்த எண்ணிக்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.

தென்னாப்பிரிக்கா கேப்டன் லோரா வோல்வார்ட் தனது தொடர்ச்சியான இரண்டாவது சதத்தை 98 பந்துகளில் 101 ஓட்டங்களுடன் பதிவு செய்தார்.
ஆனால் 42வது ஓவரில், அமன்ஜோத் கௌர் எடுத்த அதிசயமான ஜக்கிளிங் கேட்ச் மூலம் அவர் வெளியேறினார். இதன் பின்னர் இந்தியா வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்தது.
இந்தியா, குழு சுற்றில் 3 போட்டிகளில் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது.
தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகள் எடுத்ததுடன், ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இருவரும் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடி இந்திய வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.
இந்த வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய யுகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DY பாட்டில் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், இரவு 12 மணி வரை ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ICC Women’s World Cup 2025 final, India vs South Africa women’s cricket, Shafali Verma Deepti Sharma highlights, DY Patil Stadium Navi Mumbai final, India women’s cricket historic win Amanjot Kaur catch World Cup, Laura Wolvaardt century South Africa, ICC women’s cricket champions, India women’s team World Cup victory, Indian women cricketers 2025