பாகிஸ்தானுடனான போட்டியில் குறுக்கிட்ட மழை - 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இன்று தொடங்கியுள்ள ஹாங்காங் சிக்ஸஸ்(Hong Kong Sixes) தொடரின் லீக் சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதியது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் அப்பாஸ் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 86 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக இந்தியா தரப்பில், உத்தப்பா 11 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

87 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பாட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 3 ஓவரில் விளையாடி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்ட நிலையில், DLS விதிப்படி இந்தியா 2 ஓட்டங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உத்தப்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்தியா தனது நாளைய போட்டியில் குவைத் அணியை எதிர்கொள்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |