இன்னிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி! சம்பவம் செய்த ஜடேஜா
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ஜடேஜா, சிராஜ் தாக்குதல்
அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 162 ஓட்டங்களும், இந்தியா 448 ஓட்டங்களும் முதல் இன்னிங்ஸில் எடுத்தன.
#TeamIndia's fielding brilliance continues 👏
— BCCI (@BCCI) October 4, 2025
This time it's Yashasvi Jaiswal 👌
West Indies 5️⃣ down now!
Updates ▶ https://t.co/MNXdZceTab#INDvWI | @IDFCFIRSTBank | @ybj_19 pic.twitter.com/5gKY0dXiVt
பின்னர் 286 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
அணி 55 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அலிக் அதனாசி (Alick Athanaze) 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் 122 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
இமாலய வெற்றி
கடைசி விக்கெட்டுக்கு ஜோகன் லேனே, ஜேடன் சீல்ஸ் போராடினர். எனினும் ஜடேஜா, சிராஜின் தாக்குதலில் மேற்கிந்திய தீவுகள் 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிரடி காட்டிய ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) 12 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ஓட்டங்கள் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |