இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலில் சிக்கிக்கொண்ட இந்திய நடிகை
இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகின.
Mohammed Saber/EPA
700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, இஸ்ரேலுக்கான முழு ஆதரவையும் உறுதிப்படுத்தினார்.
தாக்குதலில் சிக்கிய நடிகை
பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா இஸ்ரேலில் தாக்குதலுக்கிடையில் சிக்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அவருடைய படக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் ''துரதிர்ஷ்டவசமாக நஸ்ரத், இஸ்ரேலில் சிக்கி கொண்டார். ஹைபா சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இஸ்ரேலுக்கு சென்றார்'' என கூறியுள்ளார்.
கடைசியாக அவருடன் நேற்று மதியம் 12.30 மணியளவில் படக்குழுவினர் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கு பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்பி கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். எவ்வித பாதிப்பும் இன்றி அவர் இந்தியாவுக்கு திரும்புவார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |