114 Rafale விமானங்களை கேட்கும் இந்திய விமானப்படை., ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தம் உருவாக வாய்ப்பு
இந்த விமானப்பட, 114 'Made In India' Rafale போர் விமானங்களை வாங்கும் பரிந்துரையை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
இந்த விமானங்கள் பிரான்ஸ் நிறுவனமான Dassault Aviation மூலம் இந்திய aerospace நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 60 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி உள்ளடக்கம் இருக்கும்.
இந்த பரிந்துரை தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆலோசனையில் உள்ளது.
பின்னர் இது பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான Defence Procurement Board-க்கு அனுப்பபப்டும். அங்கிருந்து Defence Acquisition Council-க்கு பரிசீலனைக்காக நகர்த்தப்படும்.
எல்லாம் சரியாக நடந்தால், இதுவரை இந்திய அரசு கையெழுத்திட்ட மிகப்பாரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக இது அமையும்.
தற்போது இந்திய விமானப்படையில் 36 Rafale விமானங்கள் உள்ளன. மேலும், 36 Rafale விமானங்கள் இந்திய கடற்படைக்காக ஓர்டர் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய 114 Rafale-கள் சேரும்போது இந்திய பாதுகாப்பு படைகளில் Rafale விமானங்களின் மொத்த எண்ணிக்கை 176-ஆக இருக்கும்.
ஆபரேஷன் சிந்தூரில் Rafale விமானங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக Spectra Electronic Warfare Suite மூலம் சீனாவின் PL-15 ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தியதால், இந்த பரிந்துரை வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian Air Force, 114 Rafale jets, France Dassault Aviation, Made In India Rafale, Rafale fighter jets