உலகின் உயரமான ஹொட்டல் Ciel Dubai Marina நவம்பரில் திறப்பு
உலகின் உயரமான ஹொட்டல் Ciel Dubai Marina நவம்பரில் திறக்கப்படவுள்ளது.
துபாயின் புகழ்பெற்ற கட்டிடக்கலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், Ciel Dubai Marina எனும் உலகின் மிக உயரமான ஹொட்டல் 2025 நவம்பர் மாதத்தில் திறக்கப்படுகிறது.
377 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த ஹொட்டல் Sheikh Zayedசாலையில் உள்ள 356 மீற்றர் உயரமுள்ள Gevora Hotel-ஐ விஞ்சி நிற்கிறது.
NORR Group வடிவமைத்த இந்த ஹொட்டல் The First Group நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
544 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஹொட்டலில் 82 மாடிகள், 1004 அறைகள் மற்றும் 147 suits உள்ளன.
Palm Jumeirah மற்றும் அரேபிய கடலை நோக்கிய panoramic கண்ணாடி சன்னல்கள், 12 மாடி உயரம் கொண்ட sky garden, உலகின் உயரமான infinity pool மற்றும் 1158 அடி உயரத்தில் sky restaurant ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
உணவுப் பிரியர்களுக்காக Tattu Dubai, Risen Café, West 13, East 14 போன்ற 8 தனித்துவமான உணவகங்கள் உள்ளன.
இந்த ஹொட்டலின் அறைகள் நாளொன்றுக்கு 1,921 திர்ஹம்ஸ் முதல் 4,400 திர்ஹம்ஸ் வரை உள்ளன.
அனைத்து அறைகளும் நவீன வசதிகள் மற்றும் Dubai Marina-வை நோக்கிய காட்சியுடன் வழங்கப்படும்.
மேலும், இந்த ஹொட்டலில் luxury spa, 24/7 gym, Dubai Marina boardwalk, Soluna Beach Club, executive lounge என பல வசதிகள் உள்ளன .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ciel Dubai Marina, luxury hotel in Dubai, world’s tallest hotel, worlds tallest hotel in Dubai, Dubai Marina