வீட்டின்மீது மோதிய போர் விமானம்: 3 பேர் பலியான சோகம்
ராஜஸ்தானில் இந்திய போர் விமானம் ஒன்று வீட்டின்மீது மோதியத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
வீட்டின்மீது மோதிய போர் விமானம்
இந்திய விமானப்படையின் MiG-21 போர் விமானம் ராஜஸ்தான் கிராமத்தில் இன்று வீடொன்றின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கரில் உள்ள பஹ்லோல் நகர் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.
PTI
விமானி சரியான நேரத்தில் விமானத்திலிருந்து தானே எஜெக்ட் செய்து பாராசூட் உதவியுடன் வெளியேறினார், அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. லேசான காயம் அடைந்த விமானியை மீட்க ஹெலிகாப்டர் விரைந்துள்ளதாக இந்திய விமானப்படை (IAF) தெரிவித்துள்ளது.
மூன்று பேர் மரணம்
விமானம், ரத்தி ராம் என்பவரின் வீட்டின் மீது விமானம் மோதியதில், அவரது மனைவி மற்றும் இரண்டு பெண்கள் - லீலா தேவி மற்றும் பான்டோ கவுர் கொல்லப்பட்டனர்.
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், "இந்திய விமானப்படையில் MiG-21 விமானம் இன்று காலை வழக்கமான பயிற்சியின்போது சூரத்கர் அருகே விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.., விமானி, விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதால், அவர் வெளியேறினார்" என்று தெரிவித்துள்ளது.
PTI
ஜனவரியில் நடந்த சம்பவம்
இதேபோன்று, ஜனவரியில், இரண்டு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் - ஒரு சுகோய் Su-30 மற்றும் ஒரு மிராஜ் 2000 - பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது, இதன் விளைவாக ஒரு விமானி இறந்தார். ஒரு விமானம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விழுந்து நொறுங்கியது, மற்றொன்று ராஜஸ்தானின் பரத்பூரில் 100 கிமீ தொலைவில் விழுந்தது.