யூடியூப்பின் CEO ஆக இந்திய வம்சாவளி நபர் நியமனம்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் என்பவர் யூடியூப்பின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யூடியூப்பின் CEO
பிரபல சமூக வலைத்தளமான யூடியூப்பின் தலைமை செயல் அதிகாரியான சூசன் வோஜ்சிக்கி தனது பதவியில் இருந்து விலகுகிறார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த CEO ஆக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி உலாவியது. இந்த நிலையில் இந்திய-அமெரிக்கரான நீல் மோகன் தற்போது யூடியூப்பின் தலைமை செயல் அதிகாரியாக மாற உள்ளார்.
நீல் மோகன்
ஸ்டான்ஃபோர்ட்டில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த நீல் மோகன், 2007ஆம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தலைமை தயாரிப்பு அதிகாரியாக மாறினார்.
மேலும் யூடியூப் குறும்படங்கள் மற்றும் இசையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். முன்னதாக நீல் மோகன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார்.
அவர் புதிய CEO ஆக நியமிக்க உள்ளது குறித்து, முன்னாள் சூசன் வோஜ்சிக்கி கூறுகையில், 'எங்கள் தயாரிப்பு, எங்கள் வணிகம், எங்கள் கிரியேட்டர் மற்றும் பயனர் சமூகங்கள் மற்றும் எங்கள் பணியாளர்கள் மீது அவருக்கு அற்புதமான உணர்வு உள்ளது.
நீல் YouTubeக்கு ஒரு சிறந்த தலைவராக இருப்பார். குறும்படங்கள், ஸ்ட்ரீமிங் மற்றும் சந்தாக்கள் என அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். AI-யின் வாக்குறுதிகளுடன், YouTube-யின் அற்புதமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் நீல் எங்களை வழிநடத்த சரியான நபர்' என கூறினார்.
அவருக்கு நன்றி கூறிய நீல் மோகன் வெளியிட்ட பதிவில், 'இந்த அற்புதமான மற்றும் முக்கியமான பணியைத் தொடர நான் உற்சாகமாக இருக்கிறேன். வரவிருப்பதை எதிர்நோக்குகிறேன்' என பதிவிட்டுள்ளார்.