சாதனை படைத்த இந்திய-அமெரிக்க இளம்பெண்: அமெரிக்க இடைத் தேர்தலில் அமோக வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இடைத் தேர்தலில் 23 வயதான இந்திய-அமெரிக்க இஸ்லாமிய இளம்பெண் நபீலா சையத் அபார வெற்றி பெற்றுள்ளார்.
சாதனை படைத்துள்ள இந்திய-அமெரிக்க இளம் பெண்
இந்திய-அமெரிக்க இஸ்லாமிய இளம்பெண்ணான நபீலா சையத்(23) அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக, இல்லினாய்ஸ் மாநில சட்டமன்றத்தின் 51வது ஹவுஸ் மாவட்டத்தில் பிரதிநிதி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார்.
குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதியில் தற்போது ஜனநாயக கட்சி சார்பாக நபீலா சையத் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இளம் வயதில் வெற்றி பெற்றுள்ள முதல் போட்டியாளராக 23 வயதே ஆன நபீலா சையத் மாறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்
குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட கிறிஸ் பாஸ் 47.7% வாக்குகளை கைப்பற்றி இருந்த நிலையில், நபீலா சையத் 52.3% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நபீலா சையத் தேர்தல் வாக்குறுதிகளாக சம உரிமை, சுகாதாரம், கல்வி மற்றும் வரி விதிப்புகளில் மக்களுக்கான நலனில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவு
தனது வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் நபீலா சையத், தான் 23 வயதான இந்திய-அமெரிக்க இஸ்லாமிய பெண் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் குடியரசு கட்சியின் கீழ் இருந்த மாவட்டத்தை தற்போது புரட்டி போட்டுள்ளோம், மேலும் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வெற்றி பெறும் மிகவும் இளம் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
My name is Nabeela Syed. I’m a 23-year old Muslim, Indian-American woman. We just flipped a Republican-held suburban district.
— Nabeela Syed (@NabeelaforIL) November 9, 2022
And in January, I’ll be the youngest member of the Illinois General Assembly.
இந்த வெற்றியை சாத்தியமாக்க எங்களிடம் நம்ப முடியாத குழு உள்ளது என்றும், இந்த வெற்றிக்கான நன்றி அறிவிப்பு நாளை வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இல்லினாய்ஸ் பிறந்து வளர்ந்த நபீலா சையத் இந்த மாகாணத்தில் வெற்றி பெறும் முதல் தெற்காசியர் ஆகிறார், இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.