இந்திய ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களின் சம்பளம் இவ்வளவு தொகையா! ஆச்சரியமூட்டும் தகவல்
இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களின் ஊதியம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர்
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லியில் தங்களது ஸ்டோர் ரூம்களை திறந்துள்ளது.
@twitter
மும்பையில் நடைபெற்ற ஆப்பிள் ஸ்டோர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம்குக் ஸ்டோரை திறந்து வைத்தார்.
இந்த இரண்டு கடைகளில் மொத்தமாக 170க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவிலுள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
@twitter
குறிப்பாக எம்பிஏ, பிடெக், பிஎஸ்சி போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்கள் தான் இங்கு பணிபுரிவதாக தெரிய வந்துள்ளாது.
ஆச்சரியமூட்டும் ஊதிய தொகை
ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் இந்தியாவிலுள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுவதாக கூறப்படுகிறது.
@twitter
எலட்ரிக்கல் ஸ்டோரில் பணிபுரியும் உயர்மட்ட அதிகாரிகள் பெறும் சம்பளத்தை விட இது அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியா வந்திருந்த போது, அவருக்கு பழைய மாடல் ஆப்பிள் கணிணியை ஒரு இந்தியர் வழங்கி போது தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியப்பட்டார். அந்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.