காஷ்மீரில் இருந்த 42 வெடிக்காத குண்டுகளை செயலிழக்க செய்த இந்திய ராணுவம்
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் மீட்கப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்க செய்துள்ளது.
வெடிக்காத குண்டுகள் செயலிழக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதியை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.
இதில் இந்திய எல்லையோரங்களில் இருந்த கிராமங்களில் பலரும் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக பூஞ்ச் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர், 42 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலின் போது பல வீடுகளும் செயலிழந்தன. இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வெடிக்காத குண்டுகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதனால் அவற்றது சேகரித்து பூஞ்ச் மாவட்டத்தின் ஜுல்லாஸ், சலோட்ரி, தராத்தி மற்றும் சலானி ஆகிய பகுதிகளில் செயலிழக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
வெடிக்காத குண்டுகளை செயலிழக்கும் பணிகளில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்டனர்.
இந்த பணிகளில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதில், வெடிக்காத 42 குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்கம் செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |