கொரோனாவை குணப்படுத்தும் பாரம்பரிய மூலிகை? நிபுணர்கள் முக்கிய தகவல்
பாரம்பரிய இந்திய மூலிகையான அஸ்வகந்தா, நீண்ட நாள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய உதவுமா என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
The London School of Hygiene & Tropical Medicine (LSHTM) மற்றும் அனைத்து இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் (AIIA) இணைந்து, அஸ்வகந்தா நோயிலிருந்து மீண்டு வர மக்களுக்கு உதவுமா என்று கண்டறியும் ஆராய்ச்சியை மேற்கொள்கிறது.
ஆற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த மூலிகை பாரம்பரியமாக இந்திய ஆயுர்வேத மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்திய சோதனைகளில், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கவலை, மன அழுத்தத்தை குறைப்பதில், தசை வலிமையை மேம்படுத்துதல் மற்றும் சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதில் அஸ்வகந்தாவின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம், கொரோனா சிகிச்சைக்கு அஸ்வகந்தா பயனுள்ளது என நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை.
நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு, மோசமான மனநலம், தீவிர சோர்வு மற்றும் தசை பலவீனம் உள்ளிட்ட பல அறிகுறிகள் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் ஒன்று முதல் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.