ரூ.5670 கோடி., லண்டனின் 2வது விலை உயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய கோடீஸ்வரர்
பிரபல இந்திய தொழிலதிபர் அதார் பூனாவாலா லண்டனில் ஒரு ஆடம்பர வீட்டை வாங்குகிறார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் (Serum Institute of India) தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா (Adar Poonawala), 2023-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள மிகவும் விலையுயர்ந்த வீட்டை வாங்குகிறார்.
ரூ. 5670 கோடி லண்டன் வீடு
இந்த புதிய வீட்டின் விலை 138 மில்லியன் பவுண்டு ஆகும். இலங்கை பணமதிப்பின்படி ரூ. 5670 கோடி ஆகும். 2023-ஆம் ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த குடியிருப்பாக இது பார்க்கப்படுகிறது.
இது லண்டனின் புகழ்பெற்ற ஹைட் பார்க் அருகே அமைந்துள்ளது மற்றும் அபெர்கான்வே ஹவுஸ் (Aberconway House) என்று அழைக்கப்படுகிறது.
Poland நாட்டு கோடீஸ்வரரான டொமினிகா குல்சிக்கிடம் (Dominika Kulczyk) இருந்து இந்த வீட்டை வாங்க பூனாவல்லா ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான இந்த வீட்டை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (SII) பிரித்தானிய துணை நிறுவனமான சீரம் லைஃப் சயின்சஸ் (Serum Life Sciences) வாங்கியது.
லண்டனில் இரண்டாவது விலையுயர்ந்த வீடு
அபெர்கான்வே ஹவுஸ் லண்டனில் இரண்டாவது விலையுயர்ந்த வீடு ஆகும்.
லண்டனின் முதல் விலையுயர்ந்த வீடு ஜனவரி 2020-ல் வாங்கப்பட்டது. 2-8A Rutland Gate எனும் அந்த வீடு 210 மில்லியன் பவுண்டுகளுக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.8600 கோடி) விற்கப்பட்டது. அதனை Evergrande நிறுவனர் மற்றும் தலைவர் Hui Ka Yan வாங்கினார்.
யார் இந்த அதார் பூனாவாலா?
கோவிட் தடுப்பூசியான COVISHIELD தடுப்பூசியை அதார் பூனாவாலாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தான் தயாரித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, வளரும் நாடுகளுக்கு குறைந்த விலை தடுப்பூசிகளை தயாரிப்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது.
இந்த நிறுவனம் தட்டம்மை, போலியோ மற்றும் டெட்டனஸ் நோய்களுக்கான தடுப்பூசிகளையும் தயாரித்துள்ளது.
இந்த நிறுவனத்தை நிறுவியவர் அதாரின் தந்தை, கோடீஸ்வரரான Cyrus S. Poonawalla. சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு 16.8 பில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.5.5 லட்சம் கோடி) ஆகும்.
Bloomberg Billionaires Indexன் படி, கோடீஸ்வரர்கள் தரவரிசையில் சைரஸ் பூனாவாலா 108வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Serum Institute of India, Adar Poonawala, Aberconway House, COVISHIELD vaccine, Cyrus S. Poonawalla, Bloomberg Billionaires Index, Poland, Dominika Kulczyk, London House