ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கும் 4 உலக பணக்காரர்கள்., கோடிகளில் நன்கொடை
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை உலக பணக்காரர்கள் 4 பேர் நேரில் பார்ப்பார்கவுள்ளனர்.
ஜனவரி 22ஆம் திகதி திங்கட்கிழமை அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த பிரம்மாண்டமான மற்றும் வரலாற்று நிகழ்வைக் காண அயோத்தியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது போல், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் நூறு வாடகை விமானங்கள் பறக்கும்.
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பல விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் புனிதர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இதுதவிர, உலக பணக்கார தொழிலதிபர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் நேரில் கலந்துகொள்கின்றனர். நினைத்தால் அண்டை நாடான பாகிஸ்தானை விலைக்கு வாங்கும் அளவிற்கு செல்வம் படைத்தவர்கள். இந்த ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பணக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.
1. முகேஷ் அம்பானி
ராமர் கோவில் திறப்பு விழாவில் உலகின் முக்கிய நபரும், இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.
ராமர் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். தகவல்களின்படி, ராமர் கோவில் கட்டுவதற்காக முகேஷ் அம்பானி பெரும் தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 8,47,874 கோடி ஆகும்.
2. கௌதம் அதானி
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி பின்தங்கியவர் அல்ல. கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
Adani Enterprises நிறுவனத்தின் உரிமையாளர் கௌதம் அதானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7,48,955 கோடி ஆகும்.
3. ரத்தன் டாடா
ராமர் கோயில் திறப்பு விழாவைக் காணும் பணக்காரர்களில் ரத்தன் டாடாவும் ஒருவர். ரத்தன் டாடா Tata Groupsன் முன்னாள் தலைவர்.
ராமர் கோவில் கட்டுவதற்காக ரத்தன் டாடா சுமார் 100 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரத்தன் டாடா தனது சம்பாத்தியத்தில் பாதியை மனிதநேயப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். இல்லாவிட்டால் ரத்தன் டாடா வருவாயில் முகேஷ் அம்பானியை விட மிகவும் முன்னேறியிருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த ஒற்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்
4. அனில் அகர்வால்
வேதாந்தா குழும நிறுவனங்களின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வால் ராம் மந்திர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நான்காவது பணக்காரர் ஆவார்.
வேதாந்தா நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
மிகவும் எளிமையான தோற்றத்தில் இருக்கும் அனில் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இவர்களைத் தவிர, Ashok Hinduja, Wipro Azim Premji, Nusli Wadia, Sudhir Mehta, G M R Rao, Niranjan Hiranandani ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, Kumar Mangalam Birla, Ajay Piramal, Anand Mahindra, K Krithivasan ஆகிய தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் Naveen Jindal, Uday Kotak, Infosys N R Narayana Murthy, Sudha Murthy, Nandan Nilekani, TV Mohandas Pai ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
anil agarwal vedanta, gautam adani, Mukesh Ambani, Ratan Tata, ayodhya Ram temple, ayodhya Ram Mandir, Indian Businessman