ஆண் குழந்தைக்கு தந்தையான இந்திய கால்பந்து அணி கேப்டன்
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
சுனில் சேத்ரி
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுப்ரதா பட்டாச்சார்யாவின் மகள் சோனம்-ஐ, தற்போதைய கேப்டன் சுனில் சேத்ரி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு நடந்தது. இந்த நிலையில் காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Indian Football/Twitter
இந்த தகவலை சோனத்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Social Media
அணிக்கு திரும்பும் சேத்ரி
சுனில் சேத்ரி தனது குழந்தை பிறப்பிற்காக விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்திருந்தார்.
இதனால் அவர் தாய்லாந்தில் நடைபெற உள்ள கிங்ஸ் கோப்பை தொடரை தவறவிடுவார் என்றாலும், சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு தொடரில் தனது அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |