நாட்டு விதைகள் விற்று 50 லட்சம் வருமானம் ஈட்டும் தம்பதி
ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த சந்தனா காடே மற்றும் அவரது கணவர் நவீன் காடே, மகளுக்காக ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கிய முயற்சி இன்று வருடத்திற்கு ரூ.50 லட்சம் வருமானம் தரும் வியாபாரமாக வளர்ந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு, அவர்கள் ‘Seedbasket’ என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்கினர்.
இதில், காய்கறி, பழம், மலர் விதைகள், grow bags, பசு சாணக் கேக் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் வீட்டுத் தோட்டம், மொட்டைமாடி மற்றும் பால்கனி தோட்டம் அமைக்க தேவையான பொருட்களாகும்.

சந்தனா, தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் காய்கறிகளை வாங்கியதில்லை. ஆனால், நகர வாழ்க்கையில், மகளுக்காக பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், ஆரோக்கியமான நாட்டு விதைகளைத் தேடத் தொடங்கினார். சந்தையில் hybrid விதைகள் மட்டுமே கிடைத்ததால், அவர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து விவசாயிகளிடம் நாட்டு விதைகளை வாங்கி, பால்கனியில் காய்கறி வளர்த்தனர்.
சந்தையில் தரமான விதைகள் கிடைக்காததால், இதற்கு இருக்கும் இடைவெளியை உணர்ந்து, Seedbasket-ஐ தொடங்கினர்.
சந்தனா, ஆறு மாதங்கள் வீட்டுத் தோட்டக்கலை வகுப்புகளுக்குச் சென்று, compost தயாரித்தல், சமையலறை கழிவுகளை பயன்படுத்துதல், பூச்சிகள் வராமல் கட்டுப்படுத்தும் இயற்கை முறைகள், முட்டை ஓடுகள் மற்றும் காபி போடி மூலம் ஊட்டச்சத்துக்களை சேர்த்தல் போன்றவற்றை கற்றுக்கொண்டார்.
தொடக்கத்தில் மாதத்திற்கு இரண்டு ஆர்டர்கள் மட்டுமே வந்த நிலையில், இன்று மாதத்திற்கு 1,000 ஆர்டர்கள் பெறுகின்றனர்.
ஆரம்ப முதலீடு ரூ.1 லட்சம் இருந்த நிலையில், தற்போது அவர்களின் வியாபாரம் ரூ.50 லட்சம் வருமானம் ஈட்டுகிறது.
இந்த தம்பதியின் முயற்சி, ஆரோக்கியமான உணவுக்கான தேவை, வீட்டுத் தோட்டம் வளர்ப்பு, மற்றும் நாட்டு விதைகளுக்கு சந்தையில் உள்ள தேவையை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |