சிறந்த எதிர்காலத்தை தேடிச் சென்ற இந்திய தம்பதியும் ஜார்ஜியாவில் உயிரிழந்த சோகம்! கதறும் உறவினர்கள்
ஜார்ஜியாவில் ஹொட்டல் ஒன்றில் உயிரிழந்தவர்களில் எதிர்காலத்திற்காக சென்ற தம்பதியரும் அடங்குவர் என தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
இந்திய உணவகத்தில் பணியாற்றி வந்த 12 பேர், கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் 11 பேர் இந்தியர்கள் என தெரிய வந்தது.
கார்பன் மோனாக்சைடு வாயு அவர்களின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த இந்தியர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜித் சிங் அவுஜ்லா தெரிவித்தார்.
மேலும், இறந்தவர்களின் உடல்களை கொண்டுவரவும், துயரப்படும் குடும்பங்களை ஆதரிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்திற்காக
இந்த நிலையில் தனது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நபர் ஒருவரும், தம்பதியரும் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜியாவுக்கு வந்த சமீர் குமார், தனது பிறந்தநாள் ஒருநாள் முன்பு இறந்துள்ளார். பிறந்தநாளில் அவரை தொடர்புகொள்ள குடும்பத்தினர் முயன்றுள்ளனர்.
ஆனால், சம்பவம் நிகழ்ந்து ஒருநாள் கழித்து உணவக உரிமையாளரை தொடர்பு கொண்டபோதுதான், சமீர் குமார் இறந்தது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
அதேபோல் சிறந்த எதிர்காலத்தைத் தேடி, 15,310 மில்லியன் செலவழித்து ஜார்ஜியா சென்ற தம்பதி ரவீந்தர் சிங், குர்விந்தர் கவுர் உயிரிழந்ததாக உறவினர்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |