இந்திய கிரிக்கெட் வீரர்களில் முதல் ரூ. 100 கோடி விளம்பர ஒப்பந்தம் யாருக்கு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்களில் முதல் ரூ. 100 கோடி விளம்பர ஒப்பந்தத்தை பெற்ற வீரர் யார் தெரியுமா?
முதல் 100 கோடி ஒப்பந்தம்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பல்வேறு நிறுவனங்களின் பல கோடி விளம்பர ஒப்பந்தங்களை தற்போது கையில் வைத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் மீதான இத்தகைய விளம்பர ஒப்பந்தங்கள் சமீபத்தில் உச்சம் அடைந்து வருகின்றன.
ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இந்திய கிரிக்கெட் அணியின் முதல் 100 விளம்பர ஒப்பந்தத்தை பெற்ற வீரர் யார் தெரியுமா? அவர் யாரும் இல்லை, கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்.
கடந்த 2001ம் ஆண்டு மார்க் மஸ்கரென்ஹாஸின்(Mark Mascarenhas) விளையாட்டுத் துறை நிறுவனமான வேர்ல்டுடெல்(WorldTel) உடன் சச்சின் இதுவரை மேற்கொள்ளாத ரூ.100 கோடி விளம்பர ஒப்பந்தத்தை முதல் முறையாக பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய பிராண்ட் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இரண்டு பத்தாண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு 2013ம் ஆண்டு ஓய்வை அறிவித்த சச்சின் இன்னும் ITC Savlon, Jio Cinema, BMW, Adidas போன்ற நிறுவனங்களின் விளம்பர நட்சத்திரமாக உள்ளார்.
2007ம் ஆண்டு ஐபிஎல்-க்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்களின் மவுசு மேலும் அதிகரித்தது, முன்னாள் இந்திய அணியின் கேப்டன்களான விராட் கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் Puma,Reliance, SBI, Oreo, India Cements, Dream11 மற்றும் Reebok போன்ற பல நிறுவனங்களுடன் 100 மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருந்தனர்.
இதன் மூலம் தற்போது விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாயாகும்.
Sachin Tendulkar, MS Dhoni, Virat Kohli, Rohit Sharma, 100 crore deal, money, businessman, Indian Cricket team, business, ITC Savlon, Jio Cinema, BMW, Adidas, Reliance, SBI, Oreo, India Cements, Dream11, Puma, Reebok
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |