கண்காணிப்பு வட்டத்தில் இந்திய தூதரக அதிகாரிகள்: கனேடிய அமைச்சர் மெலனி ஜோலி எச்சரிக்கை
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை தொடரும்
இந்தியாவைச் சேர்ந்த மேலதிக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்களா என்ற கேள்விக்கு அமைச்சர் மெலனி ஜோலி பதிலளித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் 6 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், நடவடிக்கை தொடரும் என்றே அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வியன்னா உடன்படிக்கைக்கு முரணாக செயல்படும் எந்த தூதர அதிகாரிகளையும் கனடா பொறுத்துக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்டுகிறோம் என குறிப்பிட்டுள்ள அவர்,
உலகெங்கிலும் உள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் எந்தவொரு தூதரக அதிகாரிகளும் கனேடியர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துவார்கள் என்றால், கண்டிப்பாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது உறுதி என்றார்.
வன்முறைக் குற்றங்கள்
திங்களன்று இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய சில நாட்களுக்குப் பிறகு அமைச்சர் ஜோலி குறித்த கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், வான்கூவர் மற்றும் ரொறன்ரோவில் உள்ள தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கனடா முழுவதும் டசின் கணக்கான வன்முறைக் குற்றங்களுக்குப் பின்னால் செயல்படுவதாக தகவல் கசிந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுபவர்களையே குறிவைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |