தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றிய இந்தியருக்கு நேர்ந்த துயரம்
இங்கிலாந்தில், நீர்நிலை ஒன்றில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரைக் காப்பாற்றச் சென்ற இந்தியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் துயரத்தை உருவாக்கியுள்ளது.
தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவர்
மே மாதம் 24ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்திலுள்ள Newport Pagnell என்னுமிடத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றுக்கு சுற்றுலா சென்றுள்ளது ருஷப் பட்டேல் (28) குடும்பம்.
அப்போது, இரண்டு பேர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார் ருஷப்.

சற்றும் யோசிக்காமல் உடனடியாக தண்ணீரில் குதித்த ருஷப், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரையும் காப்பாற்றிவிட்டார்.
ஆனால், தண்ணீரில் நிற்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட, தண்ணீரில் மூழ்கியுள்ளார் ருஷப்.
உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சில நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ருஷப்.
விடயம் என்னவென்றால், உயிரிழந்தும் ஐந்து பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார் ருஷப். ஆம், அவரது உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானம் கொடுக்கப்பட்டுள்ளன.
தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ருஷபுக்கு, இளம் மனைவியுடன், 18 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |