சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் 4 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்தியர்: காத்திருக்கும் தண்டனை
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 4 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இந்தியர் ஒருவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நான்கு பெண்களை துன்புறுத்தியதாக 73 வயதான இந்திய நாட்டவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலசுப்ரமணியன் ரமேஷ் என்ற நபர் விமான பயணத்தின் போது பாதிக்கப்பட்ட நான்கு பெண்களில் ஒருவரை பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் 7 கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் விமானத்தின் பயணிகளா அல்லது பணியாளர்களா என்பது இன்னும் தெரியவில்லை.
எதிர்பார்க்கப்படும் தண்டனை
பாலசுப்பிரமணியன் விமான பயணத்தின் போது பலமுறை பல்வேறு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த குற்றங்களுக்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், டிசம்பர் 13 ஆம் திகதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0CHGNQ5
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |