இஸ்ரேலில் இந்தியர்கள் யாராவது இறந்தார்களா? வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்
இஸ்ரேலுக்கும் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் பல ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும், இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாராவது கொல்லப்பட்டார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
[9LUDQV ]
இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த செய்தியும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியப் பிரஜை (கேரளாவைச் சேர்ந்த பெண்) ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை
இஸ்ரேல் தாக்குதல் குறித்த தகவல்களை வழங்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக நாங்கள் கேள்விப்படவில்லை. சுமார் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர். அங்கு மோதல்கள் நடந்து வருகின்றன, அது கவலைக்குரிய விஷயம். எங்கள் மிஷன் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு இந்தியர்களை அறிவுறுத்திகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
ஆபரேஷன் அஜய்
மேலும், இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் நமது குடிமக்கள் திரும்புவதற்கு ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"அஜய்' நடவடிக்கையின் கீழ் முதல் பட்டய விமானம் இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்காக இன்று இரவு டெல் அவிவ் சென்றடையும். நாளை காலை இந்தியா திரும்ப வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
அதுமட்டுமின்றி, மூன்று முதல் நான்கு இந்தியர்கள் காஸாவில் இருப்பதாகவும் அவர்களுடன் அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indians in Israel, Indian foreign ministry gives update on stranded nationals in Israel, Arindam Bagchi, Operation Ajay, Indians in Gaza, Israel Hamas war