தீபாவளி பரிசாக இந்திய அரசு கொடுக்கப்போவது என்ன? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு இந்திய மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு பரிசு
தசரா மற்றும் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டின் இறுதியில் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, இந்தியாவில் மக்களவை தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
அந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலையானது ஒரு பேரலுக்கு 84 டொலராக இருந்தது. ஆனால், தற்போது சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலையானது ஒரு பேரலுக்கு 74 டொலராக உள்ளது.
இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் தேவை சற்றே குறைந்துள்ளது. அந்தவகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பிற்கு அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |